என்ன தவம்

குப்பை மேட்டில்
காகிதமாய் கிடந்த
என்னை...
பார்ப்போர் எல்லாம்
சீ என்ற என்னை...
ஒருநேர வயிற்றை
கழுவவே கஷ்டப்பட்ட என்னை...
கிழிந்த ஆடையுடன்
அலங்கோலமாய் திரிந்த
என்னை...
கொஞ்சம் ஓய்வெடுக்க
கொட்டில் கூட இன்றி
அலைந்த என்னை...


கோபுரக்கலசமாக மின்னவைத்தவள்...
உயர்த்த மனிதனாய்
உருமாற்றியவள்....
பலருக்கு அன்னமிடும்
கொடையாளனாய்
மாற்றியவள்...
ஆடம்பர ஆடையில்
கம்பீரமாய் வலம்
வரவைத்தவள்....
மாடமாளிகைகள்
வசமாக்கியவள்...


எங்கிருந்தோ வந்து
என்னை மாற்றி...
வாழ்வை மாற்றி..
.எனக்காகவே வாழும்
காதலே..
என்ன தவம் செய்தேன்
உன்னை அடைய..

எழுதியவர் : பச்சைபனிமலர் (23-Sep-16, 8:02 am)
Tanglish : yenna thavam
பார்வை : 130

மேலே