அனும விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
அனும விநாயகனை எண்ணியே வாழ்வில்
அனுதினமும் ஆராதிப் போர்க்கே - இனியேதும்
துன்பமில்லை எந்நாளும் திண்ணமாய் வந்தனை
அன்னவனைச் செய்வாய் இனிது! 1
திருப்பூர் அனும விநாயகன் நற்றாள்
ஒருமனதாய் எண்ணித் தொழுவோர் - மருள்நீங்கி
எந்நாளும் இன்பமெல்லாம் எய்துவர்; உண்மையிது
வந்தனைசெய் நீஅவன் தாள்! 2