நாட்டுப்புறக்கலை

கலை கலையாய் பல உண்டு
மகிழ வைக்க சில உண்டு
நாட்டுப்புற கலைகளுக்கு
நிகரானவை எவை உண்டு

ஊரு சனம் கூடி வரும்
ஒத்துமையாய் காண வரும்
உளமாற வாழ்த்தி வரும்
பரிசு மழை குவிந்து வரும்

ஒயிலாட்டம் மயிலாட்டம்
கரகாட்டம் சிலம்பாட்டம்
பல ஆட்டம் போடுவாங்க
பாட்டு கட்டி ஆடுவாங்க

சாமிகூட எறங்கி வந்து ஆடுமடா
சந்தோசமாய் அத்தருணம் ஆகுமடா
நேரம் மெல்ல போகையிலே
மேகம் கூட மும்மாறி தூவுமடா

நாட்டுப்புற கானமது ஒளிருமடா
நாடியெங்கும் புது ஓட்டம் பாயுமடா
ஆதி முதல் அந்தம் வரை ஆடுமடா
ஆனந்தம் நெஞ்சில் வந்து சேருமடா

புது உலகம் வந்தாலும் புத்துணர்ச்சி வேணும்டா
புத்திகெட்டு போகமல் புரிஞ்சிகிட்டு வாழுங்கடா
மேற்கிசை கேட்டாலும் நம்நாட்டுயிசை மறக்கலாமா?
தமிழ் பாரம்பரியத்தை ஒதுக்கலாமா.

எழுதியவர் : கதிர் (25-Sep-16, 2:39 pm)
பார்வை : 431

மேலே