இல்லை – ஆனால்
இல்லை..
கார்முகிலோடு கைக்கோர்த்து நடந்ததில்லை
வீசும் தென்றலோடு தென்மாங்கு பாடி ஆடியதில்லை
பாடித் திரியும் பறவைகளுடன் பாசாங்கும் செய்யவில்லை
நிலவுடன் நிதானமாக நின்றதுமில்லை
மதியுடன் மகிழ்ந்து விளையாடியதுமில்லை
இயற்க்கையுடன் இன்பம் களிக்கவும் இல்லை
ஆனால்..
நல்ல உள்ளங்களோடு கைக்கோர்த்து நடந்திருக்கிறேன்
வாசம் வீசும் கலையரங்குகளில் தென்மாங்கு பாடி ஆடியிருக்கிறேன்
பாசப் பறவைகளுடன் பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறேன்
நட்புடன் நிதானமாக இருந்திருக்கிறேன்
மழலையருடன் மகிழ்ந்து விளையாடியிருக்கிறேன்
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்காக – துன்பத்திலும்
இன்பத்தை கண்டிருக்கிறேன்..... களித்திருக்கிறேன்!