காதல்

அசையும் காற்றில்
அசையா உன் பிம்பம்

ஆசை பொழுதில்
ஆனந்தம் உன் புன்னகை

இனிய ராகத்தில்
இசைக்கும் உன் பெயர்

ஈகை குணத்தில்
ஈரமான மனம்

உண்மையான காதலில்
உன்னிடம் தஞ்சமானதே மனம்

எழுதியவர் : கிரிஜா.தி (26-Sep-16, 7:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே