அம்மா என் உயிரே

அம்மா :-
========

தேனினும் இனிய அன்னையின் வாழ்வில்
நிறையட்டும் நன்மைகளே !!
வானினும் உயர்ந்த அவளுடைய அன்பில்
வாழட்டும் என் உயிரே !!

பாரினில் சிறந்த அன்னையின் அன்பில்
பிறந்தவள் நான் தானே !
பாரகம் வியந்த அன்னையை இழந்து
பரிதவிப்பவள் நான் தானே !!

தாமரை இலையின் நிலையை போலே
தவழ்ந்தவள் என் அன்னையே !!!
தா அம்மா எனக்குமே அந்த
தகுந்த உன் பக்குவமுமே !!!

தளரா மனமும், உயர்ந்த சிந்தனையும்
தந்தாயே என் அருமை தாயே !
தாங்கிடும் குணமும், எதிர்பாரா மனமும்
தந்தாயே என் அருமை தாயே !!

நிலையா உலகில் உறவுகள் போதும்
நிலை சிவன் மட்டுமே என்று
நிற்கும் எழுத்தாய் எந்தன் மனதில்
நிலைத்து பதித்தாய் ஐந்து வயதில் !!!

வானத்தில் இருந்தே மாதிவள் வாழ
வாழ்த்துவாய் அன்றோ நீ?
வாசம் வீசும் ரோஜா பூவாய் என்
வாழ்வின் சுகந்தம் நீ !!!

********* ஆக்கம் ரா. கிரிஜா

எழுதியவர் : ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு) (27-Sep-16, 8:35 am)
சேர்த்தது : ரா கிரிஜா
Tanglish : amma en uyire
பார்வை : 501

மேலே