கணக்கு விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெற்றியிலே கைவைத்து சிந்தித்தே அத்தனையும்
முற்றுமுணர் கின்ற விநாயகனின் - பொற்பதங்கள்
பற்றினோர்க்குப் பாரமில்லை வாழ்க்கை வழிதனில்
முற்றும் மகிழ்வே அவர்க்கு! 1 *
இரு விகற்ப நேரிசை வெண்பா
கணக்கு விநாயகனைக் காலமெல்லாம் வேண்ட
பிணக்கே இனிஉனக்(கு) இல்லை - இணக்கமுடன்
எந்நாளும் நீதொழில் செய்யவே வாராதோ
சொந்தமாக சொர்க்கம் உனக்கு? 1 *
இணக்கமுடன் எந்நாளும் நீதொழில் செய்ய
கணக்கு விநாயகனைப் பற்று - பிணக்கு
வராதே; வளமெல்லாம் வாழ்நாளில் பெற்றே
பராபரனை ஏத்தி வணங்கு! 2 *