காதலில் நான் 02

பெண்ணே உன் பார்வை
என் மீது பட்டதும்
இறகாய் என் உடல்
இலகாய் காற்றில் பறந்தது
இதை நான் மட்டும்
அறிந்தேன் என் காதலில் !
உன் முகம் கண்டு
வியந்த என் கண்கள்
வேறு ஒரு பாவையின்
முகம் காண விழையவில்லை
இதற்கு என்
இதயம் சாட்சி ................
உன் நிழலில்
உறைவிடம் காண
உன் அருகில்
ஆனந்தம் காண என்றும்
ஆவல் கொள்கிறேன் பெண்ணே ................
விடியாலோ
நடுநிசியோ
உறக்கமோ
விழிப்போ உன் முகம்
தான் காணலாய் காட்ச்சியளித்தது
பெண்ணே என்றும் எனக்கு !