செவ்வாய் கிரகத்தில் நான்

செவ்வாய் கிரகத்தில் நான்....

இனத்தால் வேறுபட்டோம்
மதத்தால் வேறுபட்டோம்
இரு உயிர்கள் நாமும்
ஒரு மனதாய் கலந்தே
காதலால் ஒன்றுபட்டோம்...

கன்னியென் இதயத்தை
காளை நீ வென்றெடுத்தாய்
காமம் நிறைந்த சூழலிலே
உன் காதல் கொண்டே
எனை அள்ளி அணைத்தாய்....

என் மடியில் மரணம்
கேட்டாய்...
என் உயிரில் உனக்கொரு
உறவை கேட்டாய்..
மரணம் கடந்தும் என்
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வரம் ஒன்றே நீயும் கேட்டாய்....

மணம் முடித்தே வாழ்ந்திட
நினைத்தோம்...
வேறுபாடுகள் நமை
வேறாக்கி...
நம் மனம் முறித்தே
விதி நம் வாழ்வை
முடித்தது விரைவாக...

பிறப்பால் வேறுபட்ட
நாம்...
நம் இறப்பால்
ஒன்றிணைந்தோம்...
இனம் மதம் நாடுகள்
கடந்த நாமும்
உலகம் துறந்தே புது
கிரகம் தேடி வந்தோம்...

செவ்வாய் கிரகத்தில்
நானும் நீயும்...
யாராலும் நெருங்கிட முடியா
தனி கிரகத்தில் நம்
கரங்களை ஒண்றிணைத்தே
இரு நெஞ்சங்கள் ஒரு நெஞ்சமாக
சங்கமிப்போம்....

எழுதியவர் : அன்புடன் சகி (29-Sep-16, 8:45 pm)
பார்வை : 200

மேலே