உனக்காக காத்திருக்கின்றன
உன்னை பார்பதற்காகவே என் விழிகள் காத்திருக்கின்றன...
உன் குரலை கேட்பதற்காகவே
என் செவி சாய்க்கிறேன்...
உன் முகம் காணவே கண்ணாடி பார்க்கிறேன் அதில் எனக்கு பதில் நீயே தெரிகிறாய்...
நீ செல்லும் பாதை நோக்கியே என் கால்களும் பயணிக்கின்றன...
என் நேரங்கள் உனக்காகவே
காத்திருக்கின்றன...
என் பயணங்கள் எல்லாம் உன் பயணங்களிலேயே செல்கிறது...
என் நாட்காட்டியில் உனக்காக தேதி கிழிக்கிறேன்.. தினம் உன்னை காண்பதற்காக...
என் விடியல்கள் எல்லாம் உன்னை
காண்பதற்காகவே விடிகின்றன...
என் இரவுகள் உனக்காய்
காத்திருக்கின்றன...
என் இதய துடிப்பிலும் நீயே துடிக்கிறாய்...
என் சுவாசங்களில் மூச்சாய் இருக்கிறாய்...
என் உடம்பில் குருதியாய் கலந்திருக்கிறாய்...
என்னில் இரண்டற கலந்து விட்டவனும் நீ தான்.....