காதல் அரிவாள்
காதல் அரி(றி)வாள்
முகநூலில் ஒளிந்திருக்கும்
கண்களில் தெரியாத எண்ணங்கள்
வக்கிர வாளாய் மறைந்திருக்கும்
வார்த்தைகளில் வழியாத விருப்பங்கள்
பகிரப்பட்ட செய்திகளில் பதுங்கியிருக்கும்
வேட்டை விலங்கின் வெறி
உடலையும் உறவையும் அடைய
உயிர் பறிக்க நினைத்தால்
அது இதயத்தில் மறைந்திருக்கும் காதல் அல்ல
குடலில் ஒளிந்திருக்கும் மலம்