அழகானதே

உன்னை ரசித்த கண்கள்
அழகானதே!
உன் கூந்தலில் உட்கார்ந்த பூக்கள்
அழகானதே!
உன் கன்னடத்தில்
முத்தமிட்ட மழைத்துளிகள்
அழகானதே!
உன் உதட்டில்
ஒட்டிக்கொண்ட மச்சம்
அழகானதே!
உன் நெற்றியில்
ஊசலாய் ஆடும் கூந்தல்
அழகானதே!
தாஜ்மஹாலின் தோற்றம் போல்
இருக்கும் உன் தேகம்
அழகானதே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (1-Oct-16, 11:17 pm)
சேர்த்தது : ப தவச்செல்வன்
பார்வை : 149

மேலே