பேசாமல் பேசுகிறாயோ செல்லமே

சகியே உன் மௌனம் கலைப்பது எப்போதடி!
உன் மௌனமோ எனை தினமும் கொல்லுதடி!
உன் விழிகளோ அதை மறைக்க பார்க்குதடி!
உன் இதயமோ அதை ஏற்க
மறுக்குதடி!
அதை சொல்லதான் உன் இதழோ
துடிக்குதடி
ஏனோ சகியோ நீ சொல்ல
மறந்தாயோடி!
நீ சொல்லும் அந்த வார்த்தையிலே என் உயிரும் வாழுதடி!
அதை கேக்காமலே தினமும் நெருப்பில் குளித்தேனடி
நீ அறிவாய் என்பதை நானும் அறிவேனடி
உன் நினைப்பால் என்னை சாக செய்யாதடி
நீ கொண்ட காதலைஎன் உயிர் போகும் முன் சொல்வாயோ
இல்லை என் கல்லறை முன் வந்து சொல்வாயோ?

குமா கருவாடு

எழுதியவர் : குமா கருவாடு (1-Oct-16, 9:47 pm)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 94

மேலே