சிவாஜி கணேசன்
பாட்டு மன்றம்
நடாத்திக்கொண்டிருந்த
திரைக்கு
நடிக்க கற்றுக் கொடுத்தவன்
வரலாற்றை இலகுவாய்
சொல்லித் தந்தது
உன் நடிப்பு.
வரலாற்று நாயகர்களை
மீள உயிர்ப்பித்தது
உன் நடிப்பு - ஆதலால்
நீயும் கடவுள் தான்.
இயல்பு இல்லை
என்கிறார்கள்
இயல்பாய் இருந்தால்
நீயும் சாதாரணன்
மீறியதால் தான்
நடிப்புக்கு
இலக்கணம் வகுத்தாய்
இலக்கியம் ஆனாய்.
உன் சிம்மக்குரல்
என்றும் எங்கள்
இதயம் என்கிற
சிம்மாசனத்தில்.