சாயிநாதன் தோழி

சாயிநாதன் தோழி!

வாட்டத்தை நாளும் போக்கி
வாழ்தலை எனக்கு எளிதாக்கி
வாசிக்க யோசிக்கச் சுவாசிக்க
வரமளித்த இவள் வாணி
வற்றாத அன்பு ஜீவ நதியாம்
எம் அன்னையாம் கிருஷ்ணவேணி!

சாயிநாதனே!
சண்முகப்பிரியனே!
சந்த வசந்தமே! பெயரனே!
சரித்திரம் படைக்க வந்த
சகல கலா வல்லவனே
சரிநிகரில்லா சாய் ஆரோ!

எல்லை இல்லா அன்பாலே
இதழோரம் வழியும் தீம்பாலே
கிலுகிலுக்கும் உன் சிரிப்பாலே
கிள்ளையே உன் சொல்லாலே
தள்ளாடும் தன் வயதினிலும்
பல்லாடிப் பட்டுப் போனாலும்
தங்கத் தாரகையாம் எம் அன்னை
தரணியிலே வாழ்கிறாள் தெம்பாலே!

தள்ளாடித் தான் நின்றாலும்
தலை தட்டாமாலை சுற்றினாலும்
தங்கத் தொட்டில் இவளே - உன்
தன்நிகரில்லா தோழி இவளே.!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (2-Oct-16, 6:00 pm)
பார்வை : 61

மேலே