காதலின் அரிச்சுவடி

நூல்கள் பல கண்டிட்டபொழுதெல்லாம்
நூதனமாய் ஒன்றும் படித்திடவில்லை நான்...

எழுதத் தொடங்கிய நாள்முதல்தான் எனக்கு
பலநூல்களைப் படிக்கத் தோன்றிட...

புத்தகப் புழுவாகிப்போனேன்
பூங் கவிதைகள் சில வடிக்கவும் தொடங்கினேன்...

பழைய நூல்களின் மணம் எனக்கு பித்தாய் பிடித்துப்போய்விட
படைத்த வரிகளுக்கெல்லாம் பல்வேறு குணங்கள்...

சேர்த்து வைக்கப்பட்ட பெட்டகங்களை திறந்திட்டால்
கோர்புகள் அனைத்திலும் குருதியின் வாடை...

ஒவ்வொரு கோர்ப்பும் ஒவ்வொரு கதைசொல்லும்
ஓய்ந்த நேரங்களில் எனக்கு அவைகள்தான் ஒருநேர உணவு...

இன்று திறக்கப்பட்ட சுவடியில் என் சுவடு
அவளால் அடைக்கப்பட்ட என் காதலின் வடு...

மெல்லத் திறந்து அதன் முகப்பு பிரித்து
வரிகளைத் உண்ண ஆயத்தமானேன்...

ஒவ்வொரு வரிகளும் எந்தன் பசிக்கு
ஓயாமல் இரையாகிக் கொண்டிருந்து...

வரைக்கப்பட்ட வரிகளின் மிதமிஞ்சிய சுவையில்
மீண்டுவந்த எனையே நான் இழந்து கொண்டிருந்தேன்...

ஓரளவு பசிதீர ஓய்வெடுக்கும் நோக்கத்தில்
ஒற்றையடிப் பாதையொன்றில் நான் ஓய்வெடுக்க...

எனைப்போன்றே சில உறவுகள் இங்கு
வழித்தடத்தில் வரைத்து கசக்கியெரிந்த காகிதங்கள் பல கண்டேன்...

தீராத பசிபோலும் இன்றைய இளைஞர்களுக்கு
தீண்டாத பெண்களில்லைபோலும் இந்தப் பிரபஞ்சத்தில்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Oct-16, 4:42 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 190

மேலே