டவுட்டு கண்ணா டவுட்டு ரோடு

டவுட்டு கண்ணன்::அண்ணே.. ஒரு சந்தேகமண்ணே...

அண்ணன்.: கேளுடா.. தெரிஞ்சா சொல்றேன்..!

ட.க.::அண்ணே.. இந்த ரோட்டுல வண்டி ஓட்டறப்போ மெதுவாக செல்லவும்.. விபத்து பகுதினு போர்டு வச்சிருக்காங்க பாத்திருக்கீங்களா அண்ணே.?

அ.:ஆமாடா நானும் பாத்திருக்கேன்.. அதுக்கு இப்போ என்னவாம்.?

ட.க.: இல்லண்ணே.. அந்த பகுதி விபத்து பகுதினு தெரிஞ்சும் எதுக்கு ரோடு போட்டாங்க.? அப்புறம் போர்டு வக்கணும்.?

அ.:அடேய்.. கண்ணா.. இப்போ தேர்தல் வந்தா நாம யோசிக்காம ஓட்டுபோடுறதில்லையா.? அப்புறம் ஆட்சி வந்ததும் அதை குத்தம் சொல்றமில்லே.. அதுபோலதாண்டா இதுவும்.!

எழுதியவர் : முகநூல் (5-Oct-16, 7:31 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 224

மேலே