கோட்டையில் மந்திரம் சொல்வார் மகிழ்ந்து - நேரிசை வெண்பாக்கள்

இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்

ஆறறிவு ஜீவிகளே வீண்வதந்தி நம்பாதீர்
தேறியே அம்மாவும் வந்திடுவார் - ஊறேதும்
வந்திடாது மிக்க நலமுடன் நோய்நீங்கி
மந்திரம் சொல்வார் மகிழ்ந்து! 1

ஆறறிவு ஜீவிகளே வீண்வதந்தி நம்பாதீர்
தேறியே அம்மாவும் வந்திடுவார் - மாறியே
குந்தகம் வந்திடாது நோய்நீங்கி கோட்டையில்
மந்திரம் சொல்வார் மகிழ்ந்து! 2

மந்திரம் - ஆலோசனை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Oct-16, 10:20 pm)
பார்வை : 153

மேலே