சரணடைந்தேன் வெற்றியுனதே
பூபாளம் பாடும் புலர்க்காலை தன்னிலே
புன்னகை இன்ராகம் பாடும் இவள்யாரோ
கார்க்கால மேகம் விழியின் ஒளிமின்னல்
போர்க்கா லநடவடிக் கையோஇவ் விற்புருவம்
மாறன் கணைதானோ பார்த்திடும் பார்வை
சரணடைந்தேன் வெற்றியுன தே !
----கவின் சாரலன்