தாஜ்மஹால் பூக்கள்---முஹம்மத் ஸர்பான்

இரு விழி எழுத்தில்
மூன்று சொல் காதல்
உயிரின் பாதி
உணர்வின் மீதி
மனதின் காதல்
உள்ளங்கள் எழுதும்
சுயசரிதை காதல்
காதலுக்குள் ஓர் பாவை
மழலையாய் காதலன்
நெஞ்சில் உறங்குகிறாள்
விழிகளின் கடிகாரத்தில்
-முட்களாய் காதலர்கள்-
உன் கண்கள்
தீட்டிய கடிதத்தில்
உன் இதழில்
சிக்கிய மச்சங்கள்
எம் காதலின்
அதிசய சின்னங்கள்
காதலின் முடிவிடம்
காதலும் அறிந்ததில்லை
உயிர் உள்ள வரை
உயிர்களை ஆளும்
ஒற்றை சொல் காதல்
இரு விழிகள்
தீட்டும் அன்பில்
இரு இதயம்
பேசும் மூச்சால்
மரணம் வந்தாலும்
காதலுக்கு ஐயமில்லை
கல்லறை நிலத்திலும்
காதலுக்கு பிரசவமுண்டு
சிறு குழியில்
உன் கன்னம்
மது அள்ளும்
மனக் கிண்ணம்
கண்கள் தீட்டிய
காதல் கடிதத்தை
இரு நெஞ்சங்கள்
மயில் இறகுகளால்
திறந்து படிக்கின்றது
பூக்களின் ரகசியம் காதல்
காதலின் ரகசியம் ஏக்கம்
விழிகளில் ஓர் வானிலை
தூவும் இடமெல்லாம் வானவில்
ஒவ்வொரு அசைவும்
ஆயிரம் கவிதைகள்
இப்படிக்கு தாஜ்மஹால் பூக்கள்
கண்ணுக்குள் உன்விம்பம்
நெஞ்சுக்குள் ஓவியம்
காதலில் நாமும் காவியம்