சிங்கார விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

சிற்றளவே சிங்கார நல்விநாய கன்பார்வை
பற்றிட,செய் பாவம் பறந்தோடும் - கற்றதனால்
உற்ற பயனென்சொல் ஆனைமுகன் தாள்பணிந்து
நற்றாள் தொழாஅர் எனின்! 1

சிங்கார நல்விநாய கன்பார்வை சிற்றளவே
எங்களின் மீதுபட்டு விட்டாலே - அங்கமதில்
மாற்றுக் குறையாத மாயமெலாம் நேருமே!
ஏற்றமோடு எம்பிரானை ஏத்து! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-16, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே