உண்மையில் சுதந்திரம் பெற்றோமா

ஆம் சுதந்திரம் தான் பெற்றோம்
கல்வியை வியாபாரம் ஆக்க

ஆம் சுதந்திரம் தான் பெற்றோம்
கடமை செய்வதற்கு கையூட்டு வாங்க

ஆம் சுதந்திரம் தான் பெற்றோம்
காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்ய

ஆம் சுதந்திரம் தான் பெற்றோம்
கல்யாணச் சந்தையில் வெட்கமின்றி வரதட்சணை வாங்க


மனிதனுள் மனிதம் கொல்ல
சுதந்திரம் பெற்றோம்
அந்நிய நாட்டில் அடிமையாய் வாழ
சுதந்திரம் பெற்றோம்
விவசாயத்தை வீழ்த்தி வீடு கட்ட
சுதந்திரம் பெற்றோம்
பாரத மாதாவின் வளத்தை அழிக்க
சுதந்திரம் பெற்றோம்
பணம் எனும் காகிதச் சிறையில் சிக்க சுதந்திரம் பெற்றோம்


சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் விளங்க,
வேண்டும் இன்னும் ஒரு (சுதந்திர) போராட்டம்.

எழுதியவர் : ரேவதி (7-Oct-16, 8:52 pm)
சேர்த்தது : ரேவதி
பார்வை : 587

மேலே