புதுமைப்பெண்
அன்று...
சாந்துப்பொட்டு
இன்று...
ஒட்டுப்பொட்டு...
அதுவும் சின்னப்பொட்டு...
அன்று...
ரெட்டைஜடை மூன்றடி...
இன்று...
அவிழ்ந்த கூந்தல் முக்காலடி...
அன்று...
பாரம்பரிய மேலாடை
இன்று...
பாரம் அறியா மேலாடை..
அன்று...
சின்ன சின்ன தோடு...
இன்று...
வண்ண வண்ண தோடு..
அன்று...
காட்டியவனுக்கு கழுத்தை நீட்டினாள்...
இன்று...
ஆயிரம் கேள்வி கேட்கிறாள்...
அன்று...
பெண்ணுக்கு ஏது படிப்பு..
இன்று..
பெண்ணில்லா படிப்பு ஏது...
அன்று...
அடிமைப்பெண்...
இன்று...
ஆளும் பெண்...
இதோ...
புதுமைப்பெண் வந்துவிட்டாள்...
அதை காண பாரதி தான் இல்லை...