அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - மயூரம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' - மயூரம்

வார்த்தை : மயூரம்
பொருள் :

1.சிறுமரம்,
2.ஆசன வகை,
3.மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி எனும் ஐந்து வகையான குதிரை வேகத்தில் ஒன்று.
4.சிகாவளம்
5.நீலகண்டம்
6.மஞ்ஞை

குறுப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை, கொற்ற *மயூரம்* என்கிலை, வெட்சி தண்டை
கால் என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?
2.
விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் *மயூரமுமே*!

3.
மார்க்கண்டன்

மார்நேர்வா மப்ப தாக மேல்வலம் *மயூரம்* பற்றத்
தார்கொளு மவற்றை யேயுத் தானவஞ் சிதமாய்க் கூறும்
பேர்கொளு மிக்க ரத்தைப் பிடித்தபி நயத்தைக் காட்டல்
மார்க்கண்ட னுக்கா மென்று வழுத்துவை முறைதெ ரிந்தே.

*மஹாபரத சூடாமணி என்னும் பாவ ராக தாள சிங்காராதி அபிநயதர்ப்பண விலாசம்

4.
கண்ணுவர்

எண்ணிய மார்பு நேரா மிடப்பதா கத்தின் மீது
உண்வல மயூரம் பற்ற லுத்தான *மயூர மாகும்*
திண்ணமா மக்க ரத்தைச் சீர்கொள வபிந யித்தல்
கண்ணுவர்க் காகு மென்று கருதுவாய் மனத்துட் டேர்ந்தே.

*மஹாபரத சூடாமணி என்னும் பாவ ராக தாள சிங்காராதி அபிநயதர்ப்பண விலாசம்

எழுதியவர் : அரிஷ்டநேமி (9-Oct-16, 4:04 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 538

சிறந்த கட்டுரைகள்

மேலே