தேடல்

தேடுவது எது என்று
தெரியாது பிறகு
எதை தேடுகின்றேன்
ஏன் தேடுகின்றேன்
தெரிந்துக் கொள்ள
தேடுகின்றேன்
புரிந்துக் கொள்ள
தேடுகின்றேன்
எதை தெரிந்துக் கொள்ள
எதை புரிந்துக் கொள்ள
அதுவும் தெரியாது
தேடத் தொடங்கி
கடந்த பாதை கூட
அதோ மறையும்
சூரியனைப் போல
வெகுதூரம் கடந்தும்
தேடியது எது என்று
தெரியாவில்லை
தேடலும் முடியவில்லை
ஒன்று மட்டும் புரிந்தது
என் தேடல் எது என்று
தெரியாமலே நான் மட்டும்
தொலைந்து போவேன் என்று.
#sof #சேகர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
