நான் ரசித்த இயற்கை

இருள்திரையை விலக்கி வெளியே வரும் கதிரவனை கிழக்கில் பார்க்கும் அழகோ தனியழகு

இரவில் பொழிந்த பனியால்
அதிகாலையில் வியர்த்திருக்கும் பூஞ்செடிகளின் அழகோ தனியழகு

புல்லின் நுனியில் இருந்த பனித்துளியில் முகம் பார்த்து சென்றன மலர்த்தேன் பருக
வந்த வண்டுகளின் அழகோ தனியழகு

பச்சைப்பசேலென கொத்தாகத் தொங்கும் நெல்மணிகளின் அழகோ தனி அழகு

பறவைகளின் கீச்சிடும் சத்தங்கள்
காலையில் தென்றல் மீட்டிடும் ஸ்வரவரிசையானது மகிழ்ந்து மனது நான் இரசித்த இயற்கையால்

எழுதியவர் : சி.பிருந்தா (11-Oct-16, 11:06 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 1101

மேலே