கண்ணீர் மையால் ஒரு போராளி எழுதும் கவிதை
தூண்டிலில் சிக்கி துயர்பட்டு இறந்தது மீன் பிரிந்தது உயிர் முடிந்தது கதைc யுத்தங்களின் கோரப்பற்கள் சப்பித்துப்பிய சதைப்பிண்டமாய் நான் இன்று
எனது சொந்தக் கதைகள் ஒவ்வொன்றும் சோகக்கதைகள் தான்
தரித்திரத்திலேயே என்னைப்போன்ற பல போராளிகளுடைய சரித்திரங்கள் முடிவுறுகின்றன
விடுதலை பற்றிய பேச்சுக்கே இடமில்லை பயம் பதற்றம் பரிதவிப்பு பாழாய்ப்போனது வாழ்க்கை
வாதாடிப் பெறமுடியாததைப் போராடிப் பெறமுனைந்த தமிழினப் போராளிகளின் மௌனக்கதறல் உலகநாடுகளே கேட்கிறதா?
மூச்சிழந்து பேச்சிழந்து உருவிழந்து
உரிமையிழந்து பெருமையிழந்து
தடுப்பு முகாமில் வாழும் எனக்கும்
என்னைப்போன்ற போராளிகளுக்கும்
ஒரு விடிவில்லையா..? எங்கள் கண்ணீருக்கு ஒரு முடிவில்லையா..?
அரரசாங்கமே அரசாங்கமே உன் உத்தேசம் தான் என்ன...?