பெண்ணே, பெண்ணே,

பெண்ணே, பெண்ணே,
புது மணப் பெண்ணே,
கண் நிறை கணவன் கை பிடித்து,
காலமெல்லாம் வாழ கால் பதித்து
புதுமனை வந்த புதுப் பெண்ணே,
கண் கலங்கா வாழ்வும்,
மனம் நிறை மணமும்,
திரு மறை செல்வமும்,
அல்லக் குறையா வளமும்,
சொல் மாறா வாக்கும்,
நாளும், நாளும் பெற்றிடுவாய்.
இனி தாய் வீடு வேறு, தன் வீடு வேறு,
தன் வீடு குலம் பெருக்க வந்த கோட்டம்.
தாய் வீடு கோவிலெனக் கொள்.
குறை சொல்லா மனை கண்டு,
கும்பிட்டு வர வேண்டும்.
குடியிருக்க நினைவு வேண்டாம்.
தமிழர் மரபு காத்து, உன்னதம் பெற்றிடு.

எழுதியவர் : arsm1952 (12-Oct-16, 4:50 pm)
பார்வை : 159

மேலே