வாழ்வும் வெல்லும்

சில்லெனத் தவழும் தென்றல் வருட
மெல்லவே பரிதி மேலே எழும்ப
பல்லிடைப் பட்ட பழமும் பறக்க
கல்மனம் கரைந்துக் கனியும் நாளை
சொல்லிட முடியா சுமையை மறந்து
சல்லடைப் போல சலிப்பைச் சலிக்க
நல்லிடம் பார்த்து நட்ட மரமாய்
வெல்லுமிவ் வாழ்வும் விரும்பும் வண்ணம் !