நெருக்கம் கொஞ்சம்

கரு நிற கார் முகில் சூல்ந்துவிட
சட்டென மழையும் பெய்துவிட
பச்சை மரத்தடி நனைக்காமல் காத்திட

மண் வாசம் மெதுவாக நாசியை தீண்டிவிட

என் பார்வை எதார்த்தமாய் உன் மீது ஊர்ந்துவிட

குளிர் காற்று இதமாக ஏதேதோ தூண்டிவிட

உன்பட்டு கண்ணத்தில் வானவில் 🌈 எதிரொளிக்க

என் மேனி உள்ளுக்குள் உனை தழுவ அடம்பிடிக்க

அதை அறிந்த உன் நெஞ்சம் நிலை மறந்து படபடக்க

திடீரென இடி ஒன்று உன் தயக்கம் விரட்டி விட

மின்னலை விட வேகமாய் ஒற்றிக் கொண்டாய் என் மார்போடு.

மழை சாரல் நம் உடலை நனைத்துவிட

உடலெங்கும் ஜூரமாக
இதழ் சாரல் தேனாக

போதுமென்று சொல்லவும் வழி இல்லை மூச்சடைக்கும்
உன் நெ(இ) ருக்கத்தாள்....

எழுதியவர் : sanjeev(psycho11) (14-Oct-16, 1:53 pm)
சேர்த்தது : சஞ்சீவ்
Tanglish : nerukkam konjam
பார்வை : 384

மேலே