திருப்பம்
திருப்பதி சென்றால்
திருப்பம் ஏற்படும் என்றார்கள்..!
திருப்பதியிலிருந்து திரும்புகையில்
திடீர் திருப்பமாக
திருப்பதி வாகனம் மோதி
திருப்பிக்கொண்ட எங்கள் வாகனம்
திருப்பதியையே முறைத்தபடி நின்றது!
நல்லவேளை யாருக்கும் ஒன்றுமில்லை;
ஒருவேளை திருப்பதியிலிருந்து
உயிரோடு ஊர் திரும்பியதுதான்
நல்ல திருப்பமாக இருக்குமோ...!