கொடி பொருளாதார அரசியல்

கொடி
(பொருளாதார அரசியல் )


வாடகைக்கு வந்த கூட்டம்
வேடிக்கை பல காட்டி நம்மை
வாடிக்கையாளராக வளைத்து
போட்டது அந்தக்கூட்டம்

அந்நியனை வெளியேற்றி
ஆளும் நம் கொடியேற்றி வாழ்ந்தாலும்
நாம் வாழவில்லை இன்னும்
நம்மை நாமே ஆளவில்லை

சுதந்திரம் என்று மட்டும்
சுதந்திரமாக சொல்ல வைத்தது
அந்நிய தந்திரம்
அந்நிய பொருட்களால் நம்மை
அடிமையாக்கியது அவனின்
அற்புதமந்திரம்

"உடலும் உயிரும் உருகி"- நம்
உழைப்பின் பிறப்பாய் பணமிருக்கு
அந்நிய பொருளின் மோகத்தால்
அதை அள்ளிக்கொடுக்கும் குணமிருக்கு



நாட்டுக்கு நல்லதென
எதை செய்தோம்
நமக்கென்ன என்றுதானே
எதையும் செய்யாமல் விட்டோம்

அந்நிய பொருளின் மோகம்
அன்னை பாரதத்திற்கே சோகம் ஆதலால்
அன்னை பாரதப் பொருளின் பயன்பாடு
அன்னை பாரதத்திற்க்கே உயர்பண்பாடு

எழுதியவர் : சே.மகேந்திரன் (14-Oct-16, 11:46 pm)
பார்வை : 149

மேலே