காதல்கலககாரி

என் கண்கள் எனும்
எல்லை வழியே ஊடுருவி
என் இதயம் எனும்
குட்டித்தீவை ஆக்கிரமித்தவளே,
உன் காதல்
ஓர் எல்லை தாண்டிய
பயங்கரவாதம்!!
என் இதயத்தீவிற்குள்
திடீரென கலகமூட்டுகிறாய்,
மவுனமாய் புரட்சி செய்கிறாய்,
திடீரென ரணப்படுத்துகிறாய்,
என் இதயத்தை ஆளும்
நீ ஓரு அழகிய
சர்வாதிகாரி!!
நீ முத்தங்களை வரியாக கேள்,
நூறு மடங்கு தருகிறேன்!
நீ ரணங்களை அல்லவா கேட்கிறாய் ,
என் அழகிய காதல்(கலக)காரியே!!!