என் தனம்
தினம் தினம் பார்க்கின்றேன்; என் தனத்தை ; பார்க்காமலே போகின்றாள்; போலித்தனத்தாள்; ஏமாற்றத்தை ஏந்திய ; என் தலை தொங்கும்; எட்ட நின்று பார்த்துப்போவாள்; கள்ளத்தனத்தாள்; வெடுக்கென நிமிர்வேன்; வழிந்து சிரிப்பாள்; மாட்டிக்கொண்டதை மறைக்க; வெகுளிதனத்தாள்; அவளோ வெள்ளைமனத்தாள்; அவள் பிறந்த பின்தான் ஆஸ்திகள் ; சேர்ந்ததாகவும் அப்பன் சொன்னதாகவும் சொன்னாள்; அதனாலேயே தனலட்சுமியென பெயர் வைத்தார்களாம்; என நெருங்கியமர்ந்த வேளையிலே; நெடுநேரம் பேசியிருப்பாள் என் தனலட்சுமி;