திரியைத் தூண்டுவதாய் உன் முத்தம்

வஞ்சியின் கண்ணத்தை வருடுவதாய்
வயலினை மென்மையாய் இசைக்க

மல்லிகைப் பந்தல் தழுவிய மழைச்சாரல்கள்
வீசும் காற்றினில் வந்தெனைச் சேர

மெதுவாய் என்னை நீ மயக்க
மெழுகாய் நான் உருகிப் போக

மனதில் பற்றிக்கொண்ட மோகம் ஒருபுறம்
திரியைத் தூண்டுவதாய் உன்முத்தம் மறுபுறம்!!!

-g.k

எழுதியவர் : kaavya gk (15-Oct-16, 9:42 pm)
பார்வை : 162

மேலே