மழலை நிலா சிரிக்கிறது
மழலை நிலா சிரிக்கிறாயாடி
மனதில் மழை பொழிகிறாயடி
ஒரு நிலா தந்த நிலவே
கனாக் கண்ட நினைவாய்
கையில் விரிந்த புத்தகமே !
உனைத் தழுவும் பொழுதினிலே
உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுதடி
உனை முத்தமிடும் போதினிலே
என் மனம் போதையில் ஆடுதடி
கண் சிமிட்டும் சின்ன மின்மினியே
நான் எழுதிய கவிதை ஓவியமே !
----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
