மனதின் அலைகள்
கண்வழி சொல்லும் காதல் போதும்
காரிகை சொல்லும் வார்த்தை போதும்
தன்வசம் ஈர்க்கும் வாசனை போதும்
சரியும் கூந்தலின் மல்லிகை போதும்
இன்னிசை பாடும் குரலும் போதும்
இறக்கும் காலம் வருகும் போது
என் இனிமை பெண்ணே ! என்
அருகில் தவழும் உன்பாசம் போதும்!!
நிம்மதி காணும் வாழ்வை தேடி
நிரந்தர மில்லா வாழ்வில் வாடி
சம்மத மில்லா வாழ்வில் கூடி
தெரியா கயவரின் சத்தியம் நாடி
தம்மில் தொலைத்த தம்மை தேடி
எரியும் தீயில் பெண்மனம் கோடி!
எம்மத மின்றி காதல் கொண்டு
தேடி வருகிறேன் உன்சம்மதம் நாடி!
இருபது வயதில் அழகிய கவிகள்
எனக்குத் தருவது தேவதை விழிகள்!
வருகிற கனவில் உன்னத ஒலிகள்
என்று கேட்பது கொலுசின் ஒலிகள்!
மாறும் வாழ்வில் மாறா அலைகள்
என்னுள் பூத்த காதல் மலர்கள்!
அறுபது வயது ஆனால் கூட
என்னுள் இருப்பது உந்தன் நினைவுகள்!