வாழ்க தமிழ்

தமிழருக்கு தனிநாடில்லையென தம்மையேதாம் இழிவுபேசிடும் எம்தமிழா
தமிழருக்கே உரித்தான ஒருகண்டம் தண்ணீரில் முழ்கியதனை நீயும் மறந்தாயோ...!

தென்முனையில் கடல்சீற்றத்தால் கொலையுண்டு புதையுண்ட குமரிகண்டம்
தமிழர்பண்பாடு அறிந்திடாத தமிழர்களுக்கு எப்படித்தெரியும்...?

ஆளுமைத்திறனுள்ள நம்கண்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே
ஆழிப்பரப்பினில் அமைதியாய்மூழ்கி கோட்பாடற்று உறங்குவதனை நீயும்அறிவாயா...?

புதையுண்ட தமிழ்மண்ணில் மீதப்பட்ட சிறுநிலப்பரப்பினைகூட
கதையெனக்கருதி இப்போது மனம்தாளாது காத்திட மறுக்கின்றாயே...!

நெஞ்சுபுடைக்க மார்தட்டி தமிழனென்ற முத்திரையை
நாவாடலில் மட்டும் தமிழ்வேண்டாம் எம்தமிழா...!

முத்தமிழும் ஆங்கே கொத்தாக மடிந்திருந்தாலும்
வித்தாக பலதேசத்தில் முளைத்து விருட்சங்களாய் காட்சியளிப்பதைக் காணாயோ...!

தளறாது தமிழில் சொல்லாடு
தவறாது நம்தலைமுறைக்கு சொல்லிக்கொடு...

தமிழ்தேசம் என்றும் துளிரட்டும்
தமிழரினம் இவ்வுலகில் எங்கிலும் ஓங்கட்டும்...

#வாழ்க_தமிழ்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (18-Oct-16, 7:54 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 51

மேலே