ஏன் பிரிந்தோம் நட்பே

முகநூலில் படித்த போது என் மனதைதொட்டது.
உங்கள் பார்வைக்கும்...!
ஆனால்...

இது கதையல்ல..
உண்மை சம்பவம்...!

மதுரை "கார்ப்பரேசன் " பள்ளியில் ஆறு முதல் 11 வரை ஒன்றாக படித்தோம்.
என்னையும், என் நெருங்கிய பிராமண உயர்குலத்து தோழியையும் , ஆசிரியர்கள் வியப்போடு பார்ப்பார்கள்.

எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தை பிறந்த பிறகு அவளுக்கு திருமணம்.

அவள் வீட்டின் ஒரு அங்கமாக நானும் என் வீட்டில் ஒரு அங்கமாக அவளும் இருந்தோம்.

நான் செ ன்னை வந்தேன். அவளும் "வெஸ்ட் மாம்பலம் " வந்தாள்.
இது எங்கள் பாக்கியம் என்று நினைத்தோம்.

என் இரண்டு பிள்ளைகள், என் நாத்தனார் பிள்ளைகள் "ஆண்டி " என்று அன்புடன் தோழியை அழைப்பார்கள்.

என் கணவரை அண்ணா வென்றே அவள் அழைப்பாள்.

ஆண்டவன் கிருபையால் சந்திப்புகள் தோன்றி ஆண்குழந்தைக்கு தாயானாள்.

என் குழந்தைகளுக்கு அவள் செய்ததெல்லாம் நான் திருப்பி செய்ய துடித்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று ஒருநாள் கண்களில் நீர் நிறைய கூறினாள், "ஜரினாமா நம் சந்திப்பு இனி தொடராது. என் கணவருக்கு பிடிக்கவில்லை."

அன்று உடைந்தது எங்கள் உள்ளம். உண்மை நட்பு துண்டாடபட்டது.

இன்று என் மகன் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை.

அவன் கூறுகிறான், *"ஆண்டியை பார்க்க ஆசையாயிருக்கும்மா.. இது என் மனைவி, பிள்ளைகள் என்று காண்பிக்க வேண்டும்.!"

நான் அவனுக்கு என்ன சொல்ல.?

மதுரை நீரூற்றி எங்கள் நட்பை வளர்த்தது.!
சென்னை எங்கள் நட்பை தீ மூட்டி எரித்துவிட்டது.!

எங்கள் நட்பை பிரித்தது எது.?
விடை தெரியவில்லை..!

*ஜரீனா ஜமால்*
( களப்பணியாளர்)
*வெல் ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா*

★*******************★
நட்புக்கும் கரு உண்டு தோழர்களே...
கலைக்காதீர்கள்..!

நட்புக்கும் கற்புண்டு தோழர்களே...
அழிக்காதீர்கள்.!

நட்புடன் குமரி

எழுதியவர் : ஐரீனா ஜமால் (18-Oct-16, 1:00 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
Tanglish : aen pirinthom natpe
பார்வை : 406

மேலே