மன வீதியில்

கவிதை வானில் கனவுகளை எழுதுகிறேன்
கடலின் அலைகளில் ராகங்களை ரசிக்கிறேன்
நினைவுப் பொழிலில் தாமரையாய் விரிக்கிறேன்
மாலைப் பொழுதினில் மனதை இழக்கிறேன்
மஞ்சள் பொழிவினில் நெஞ்சில் நனைகிறேன்
மனவீதியில் சொல்லிலாக் கவிதையாய் மௌனத்தில் நடக்கிறேன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-16, 4:47 pm)
Tanglish : mana veethiyil
பார்வை : 220

மேலே