திருமண வாழ்த்து...நண்பனுக்காக...
தரணியில் உதித்த தங்கமலர்களே...!
பவள ஏட்டில் பொன் எழுத்துக்களால்
என் வைரக் கவிதையால் வாழ்த்துகிறோம்.
நவரத்தின கூட்டுக்குள் ஈருடல் ஓருயிராய் மணம்பரப்புங்கள்.
வெள்ளி அருவியென இரு மனமும் ஒரு மனமாய் ஒளி வீசுங்கள்.
சிப்பிக்குள் முத்தாய் இல்லறத்தில்; இலக்கணம் காணுங்கள்.
உங்களது.....
வாழ்வின் இனிமையை சரித்திரம் கூட
விசித்திரம் என சித்தரிக்கட்டும்.
பாசத்தின் பிணைப்பை பூக்கும் பூக்கள் கூட
வாசம் என உணர்த்தட்டும்.
அன்பின் வலிமையை அவனி கூட
அதிசயம் என வியக்கட்டும்.
அட்சய பாத்திரமாய், மங்கா ஒளிவிளக்காய்
மகுடம் சூட,
நட்சத்திர பந்தலில் தோரணம் கட்டி
வட்ட நிலவில் பொட்டு செய்து
ஒய்யாரக் கதிரோனை தீபமாய் ஏற்றி
விரிந்த வானமுமாய் பரந்த மனதுடன்
வாழ்த்துகிறோம்...