பூமி உன் காலில் கிடக்கு
கண்ணீரோ ? - உன்
கண்ணிரண்டின் ஓரம்..
கண்மணியே - சொல்லு
நெஞ்சிலென்ன பாரம்..
விண்ணையே விலை பேசலாம்
கல்விச் செல்வம் இருந்துட்டா..!
அன்னையின் ஸ்பரிசம் விட்டு
அகிலம் கற்க வெளியில் வா..!
பள்ளி செல்ல - நீ
துள்ளி குதிச்சு வாடா..!
கல்விக்கேணி - அதை
அள்ளிப் பருக வாடா..!
புத்தகத்தை நீ சுமந்து
புரியாத புதிர் உடைச்சா...
புகழ்ச்சிகள் தேடிவரும்
புத்தகங்கள் உன் பேர் சுமக்கும்...!
பிச்சையெடுத்தும் படிச்சிடனும்
பெரியவங்க சொல்லுண்டு..!
பிச்சையெடுத்தும் படிச்சிபுட்டா
பிச்சைக்காரன் எவனிருப்பான்...!
பிறர் போன பாதை படிப்பு...
புரிய வேண்டும் அதுவுமுனக்கு..!
புதியதாய் நற்பாதை உனக்கு
போட்டுவிடு...
பூமி உன் காலில் கிடக்கு..!!