தாயின் நெஞ்சணையே பஞ்சணை
காதல் என்ற போதை காதலன் என பாதை தவறி கயவனிடம் சிக்கிக்கொண்டாள் பேதைப்பெண் ஒருத்தி....!
உயிர், உறங்க கருவறை, பாசம், குருதிப்பால் கொடுத்து உயிரிலும் மேலாக வளர்க்கின்றாள் தன்
தொப்பிள் கொடி உறவை...!
கணவனோ குடிகாரன் தினமும் அடி உதை வேதனை.. அவனுடனே வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுகின்றாள்
தன் குழந்தைக்காக...!
இருந்த காசை பறித்துச் செல்லும் கணவனைப் பார்த்து அடக்கி வைத்த கண்ணீர் துளிகள் அவள் இமைகளை விட்டு தாண்டுகிறது...!
பதறினாள் அவள்
மார்பில் பால் இல்லை
பிள்ளையின் பசியை போக்க தெரியாமல் தவிக்கிறது தாய்மை....!
தாயின் நெஞ்சணையே பஞ்சணையென அவளின்
மார்பின் மேல் பாலுக்காய் தவழ்ந்து புரளும் குழந்தைக்கு தெரியுமா?
தாய் பசி மயக்கத்தில் என்று......!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.