தங்கைக்காக உயிரையும் தருவேன்
![](https://eluthu.com/images/loading.gif)
சகி :
அக்கா....மூன்று எழுத்து...
பிரபா.....மூன்று எழுத்து....
துளசி......மூன்று எழுத்து...
நான் மட்டும் தனியாக சகி...
பிரபா :
என் உயிர்
சகி என்னும் இரண்டெழுத்தில்.....
என் உயிர் நின்றாலும்
என் சகி மனதில்
நாளும் வாழ்வேன் நான்...
என் ஓர் உயிர்...
ஈரெழுத்தாகி
என் மூன்றெழுத்தில்
சங்கமித்து விட்டது.....
நான்கெழுத்தை கேட்டால்
ஏனோ தர மறுக்கிறது.....
ஐம்பூதமும் அவளாகவே தெரிகிறது.....
ஆறறிவும் அவள்
ஏழிசைக்குள் மயங்கி விடும்
எட்டு திசையிலும் அவள் முகமே...
நவ ரத்தினமும் தோற்றுவிடும்
அவள் முன்னே.....
என் உயிர் உடல் உணர்வு
மொத்தமும் அவள்...
என் சொத்தானவள்.....
என் பத்து விரலும்
கோர்த்துக் கொள்ள
காத்திருக்கிறது அவளை......
என் கண்ணே .....
என் மெய்யே.....
என் சொல்லே.....
என் மொழியே.....
என் மண்ணே......
என் பொன்னே.....
என் விழியே......
என் விண்ணே.....
என் சிலையே.....
என் கலையே.....
என் தாயே......
என் சகியே............
எல்லாம் இரண்டெழுத்தல்லவா.......
தங்கை........