தொலைந்து போவோம் வா

மலர்களின் மென்மை கொண்ட இதழ்களின் மேடையில் காதலோடு உன்னுடன் நாட்டியமாட வந்தேனடா
ஓர் இரவில்...!

சிறகுகள் விரித்து யாருமற்ற நேரத்தில் இன்பமாய் பறப்பதற்காய்
என்னை அழைத்துச் சென்றாயடா
காதல் வானில்....!

சிறகடிக்கப்பட்ட என் கனவுகளை மீண்டும் கோர்த்து உன் தோளோடு தோள் சாய்ந்து நடந்தேனடா
உலகை மறந்தவளாய்...!

பிரிக்க முடியாத கருவுற்ற குழந்தை போல் நானும் என் காதலும் உன் இதயக் கருவறையில் இணைந்து விட்டதடா உன் அணைப்பு சுகத்தால்.!

உன் இதழ் என் இதழை சிறைப்பிடிக்க
உன் கைகள் என் மேனியை அணைத்திழுக்க இவ் உலகைவிட்டு
தொலைந்து போவோம் வாடா
நம் தேனிலவுக்கு.....!!!

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (23-Oct-16, 1:32 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 95

மேலே