நதிக்கரை ஞாபகங்கள்

காலைப்பொழுது கான குயில் குரலில் என்னை நீ எழுப்பிட
கலையா என் தூக்கத்தில்
கலை கொண்ட உன் முகத்தை புன்சிரிப்புடன் பார்த்தெழுந்தேன் நான்!

அந்தி மழைச்சாரல்
விரல் கோர்த்து வெகுதூரம் யாருமற்ற தனிமையாய் அழைத்து சென்றாய் காதல் அணைப்புடன்...!

அமைதியான அழகிய நதிக்கரை
நதியின் மெல்லிய சத்தம் நம் அணைப்பை அதிகரிக்க என்னை மறந்து தவழ்ந்தேன் நான் உன் மடியில்....

நதி நீரின் ஓசை நம்மை உற்சாகப் படுத்துவதவே இதமான காற்றும் சேர்ந்து வீசிடவே உன் இதழ்கள் என் இதழை ஆக்கிரமிக்கத் துடித்தது

மீன்களோ தங்கள் காதல் லீலைகளில்
நானே உன் அழகிய கரங்களால் அணைக்கப்பட மிதந்தேன்
காதல் வான்வெளியில்....

எல்லை மறந்தவர்களாய் நாமிருக்க நதி நீரோ நம் மீது தெறிக்க விழிப்படைந்து வெட்கமடைந்து தலை குனிந்தேன் தான்...

நிலவு வானில் வர மெதுவாக வீட்டுக்கு சென்றோம் மகிழ்ச்சியில்... மீண்டும் வராதா என்ற ஏக்கத்தில் அந்த நதிக்கரை ஞாபகத்தில் வாழ்கிறேன் நான்...!

எழுதியவர் : சி.பிருந்தா (23-Oct-16, 1:29 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 151

மேலே