அன்பே இதுதான் சொர்க்கமடி
வண்ணமலர்த் தோட்டம் ஒன்று வேண்டும்
வானில் வட்ட நிலவு வந்து அங்கே சிரிக்க வேண்டும்
சிட்டுக் குயில் ஒன்று சினிமா மெட்டு பாட வேண்டும்
வண்ணப் பூக்கள் எல்லாம் தலை அசைத்துக் கேட்க வேண்டும்
சிறகடித்து வெண்புறாக்கள் பறக்க வேண்டும்
மயில் ஒன்று தோகை விரித்து ஆட வேண்டும்
மான் ஒன்று துள்ளி ஓட வேண்டும்
அருகே நீரோடை ஒன்று சல சலத்து ஓட வேண்டும்
இயற்கையுடன் நான் இப்படி காத்திருக்கும் வேளையில்
அருகில் நீ வந்து அமர்ந்து தோள் சாய்ந்திட வேண்டும்
அப்பொழுது நான் அன்பே இதுதான் சொர்க்கமடி
என்று கவிதை எழுத வேண்டும் !
~~~கல்பனா பாரதி~~~