மறுமலர்ச்சி

பெண்ணே !
நேற்று நீ சூடிய
செம்பருத்திப்பூவை
இன்று நானெடுத்து
முகர்ந்து பார்த்தேன்
அதில் மலரின் வாசம்
போய்விட்டது !
ஆனால் உன் கூந்தல் வாசம்
போகவில்லை !
அதனால்தானோ என்னவோ
அந்தப் பூ இன்னும்
வாடவில்லை.
அதுபோல்தானடி பெண்ணே
நானும், எத்தனைமுறை
வீழ்ந்தாலும்
மீண்டும் எழுகிறேன்
உன் பார்வை பட்டதும்
புது மனிதனாக .....!

நா

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (25-Oct-16, 2:38 pm)
பார்வை : 95

மேலே