கேட்பாரற்று கிடப்பது யார் - நாகூர் லெத்தீப்

கணவன்
இருந்தும்
விதவை கோலம்
குடிகாரனுக்கு
மனைவி...???

வீட்டிலே
அடுப்பு
அரிதான நெருப்பு
குடிகார வர்கத்தின்
எதிர்ப்பு
வீடுகளில்....!!

கை பிடி
வருமானம்
மரியாதையோ
விமானம்
பெண்களோ
நிதானம்
கனவனிடத்திலே..!!

சுமந்தவள்
மீண்டும்
சுமக்கிறாள்
ஆண்களின்
ஆட்டத்தை
வாழ்வின் இறுதிவரை....!!

கலைப்பு
தீர ஒருமுறை
பானம் அதோடு
தொடருதே கானம்
நிதானம்
தவறியே....!!!

பண்புகளை
புதைக்கும் அரக்கன்
மதுவெனும்
மாய தோற்றம்
கொண்டது
மதிமாறியது
வீதியில்
தடுமாறியது...!!!

எழுதியவர் : லெத்தீப் (26-Oct-16, 11:46 am)
பார்வை : 43

மேலே