உன் காதலால்

என்னை எனக்கே
அறிய வைத்தாய்..

எதற்கும் கட்டுபடாமல் இருந்த
என்னை உன் வார்த்தைக்கு
கட்டு பட வைத்தாய்..

திமிராய் திரிந்த என்னை
உன் அன்பால் மாற்றினாய்..

ஊருக்கே அடங்காதவனை
உன் பேச்சால் அடி பனிய வைத்தாய்..

எதற்க்கும் கலங்காதவனை
உன் பிரிவால் கலங்க வைத்தாய்..

கல்லாய் இருந்த என் மனதை
உன் அன்பால் கரைய செய்தாய்..

எதிலும் நாட்டம் இல்லாதவனை
உன்னால் வாழ்கையில் நாட்டம்
கொள்ள வைத்தாய்..

எப்படியோ இருந்த என்னை
உன் காதலால் மனிதனாய் மாற்றினாய்..

எழுதியவர் : கா. அம்பிகா (26-Oct-16, 5:33 pm)
Tanglish : un kaathalaal
பார்வை : 115

மேலே